திரிஷா உடன் அந்தமானில் விஜய்சேதுபதி!

Wednesday, 14 June 2017 - 12:31

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%21+

பழம்பெரும் பட நிறுவனங்கள் எல்லாம் படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் ஒரு சில பட நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து படங்களை தயாரித்து வருகின்றன.

அவற்றில் குறிப்பிடத்தக்க நிறுவனம் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை, விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி போன்ற படங்களை  தயாரித்தது இந்த நிறுவனம்தான்.

இந்த படங்களைத் தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம் 96.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.

மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்க, மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு           –       சண்முகசுந்தரம்

இசை                   –        கோவிந்த் மேனன்

எடிட்டிங்            –        கோவிந்தராஜ்

கலை                  –        வினோத் ராஜ்குமார்

பாடல்கள்        –        உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம்            –        சி.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்

96 படத்தின் துவக்க விழா ஜுன் 12 சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கதாநாயகன் விஜய்சேதுபதி, கதாநாயகி திரிஷா, இயக்குநர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குநர் லஷ்மன், இசையமைப்பாளர் ஃபைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, கொல்கத்தா ராஜஸ்தான் பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஜனரஞ்சகமான படமாக 96 உருவாக உள்ளது.