7.7 மெட்ரிக் தொன் நிறையான தேயிலை விற்பனை...

Sunday, 18 June 2017 - 11:34

+7.7+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88...
இந்த வருட தேயிலை ஏல விற்பனையின் 23வது ஏல விற்பனை இந்த வாரம் இடம்பெற்ற போது 7.7 மெட்ரிக் தொன் நிறையான தேயிலை விற்பனை செய்யப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட தாழ் நில தேயிலை ரகத்திற்கு சிறந்த கேள்வி இருந்ததாக தேயிலை ஏல விற்பனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ரக தேயிலைகளுக்கு ரஷ்யா, ஈரான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் அதிக கொள்வனவை செய்துள்ளன.

அதேபோன்று இரண்டாம் தரத்தை கொண்ட தேயிலைகள் குறைந்த விலையில் அதிக அளவில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று துருக்கி நானாவித தேயிலையினை பெறுவதில் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.