அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு 275 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..

Monday, 19 June 2017 - 10:29

%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+275+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81..
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 275 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
 
நிதியத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் சி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
 
அனர்த்தத்தின் காரணமாக 23 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இவற்றில் ஓரளவு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 700 ஆகும்.
 
இதற்கமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாயிரம் ரூபா அடிப்படை இழப்பீடு வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.