Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D..
Monday, 19 June 2017 - 13:04
வடக்கு முதல்வரும் பதவி விலக வேண்டும் - சுமந்திரன்..
35

Shares
4,204

Views
மாகாண அமைச்சுக்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் வடக்கு மாகாண முதலமைச்சரும் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அவர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும்பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக பிளவுபடும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் யாழ் ஆயர் ஜஸ்டின் ஞானபிரசகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதின முதல்வர் ஆகியோர் இன்று  வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை தனித்தனியே சந்தித்துள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவர்கள் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து சந்தித்தனர்.

அந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் சீ,வி விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துரைத்தார்.

தமக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து யாழ் ஆயரும், நல்லை ஆதின முதல்வரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
396 Views
10,243 Views
4,745 Views
3,791 Views
248 Views
5,564 Views
Top