Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%3A+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF++
Monday, 19 June 2017 - 15:53
ஹட்டன் - டிக்கோயா குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு : மாகாண சபை அமைச்சர் ரமேஷ் அதிரடி
2,069

Views
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று திகதி நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டமானது நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் கே.கே. பியதாஸ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அமைச்சர் பீ. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், மத்திய மாகாணசபை அமைச்சர் எம். ரமேஸ், பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பல அரச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டம் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

சுமார் காலை 10.30 மணியளவில் கடந்த வாரம் அதிகமாக பேசப்பட்ட ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் குப்பைகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வாக ஹட்டன் பிரதேசத்தில் இடம் ஒதுக்குவதற்கு அபிவிருத்தி குழு கூட்டத்தின் மூலம் பேசப்பட்டபோதும் நடைமுறைக்கு வரவில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் பீ. சத்திவேல் விளக்கமாக முன்வைத்தார்.

அதற்கு அச்சபை இது சம்பந்தமாக இணை தலைவர் அமைதியான முறையில் முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

இதற்கு இ.தொ.கா.வின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனராஜ், பிலிப், சத்திவேல் ஆகியோர் எங்களுக்கு இந்நேரமே இதற்கான முறையான தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு மிகவும் காரசாரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவரும் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் இணைப்புச் செயலாளரான நகுலேஸ்வரன் இந்த ஒரே பிரச்சனையை மட்டும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம், சபையில் எங்கள் பிரச்சினைகளைப் பற்றியும் பேச வேண்டும் என ஆணித்தரமாக கேட்டுக்கொண்டார்.

இதற்கு இச்சபையின் இ.தொ.கா.வின் உறுப்பினர்கள் வந்தவர்களெல்லாம் இச்சபையில் கருத்து தெரிவிக்கமுடியாது என தெரிவித்த பின்னர் சபை அதை ஏற்றுக்கொண்டது.

அதற்கு பின் மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஷ் இச்சபையில் மீன் கடை போன்று ஏற்படுத்தாமல் நான் அமைச்சர் என்ற ரீதியில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் ஹட்டன் - டிக்கோயா நகரசபை குப்பைகளை நுவரெலியா, லிந்துலை, அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடங்களில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டுவதற்கு இச்சபையின் தீர்மானம் எடுக்க கோரினார்.

இதற்கு இணைத் தலைவர் கே.கே. பியதாஸ, அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட இச்சபை ஏற்றுக்கொண்டது.

இச்சபை இக்கருத்தை ஏற்றுக்கொண்ட போதும் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் இணைச் செயலாளர் நகுலேஸ்வரன் இக்குப்பைகளை எங்கள் பிரதேசங்களில் கொட்டினால் பெரும் பிரச்சிகைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். கொட்டுங்கள் பார்ப்போம் என சவால் விட்டார் இச்சபைக்கு.

அதன்பின் அமைச்சர் திகாம்பரம் வேறுஒரு வேலையின் நிமித்தம் சபையிலிருந்து வெளியேறினார்.

மீண்டும் நகுலேஸ்வரன் அச்சபையில் கதைத்ததிற்காக இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவலிங்கம், அமைச்சர் ரமேஷ், கணபதி கனகராஜ், பீ. சத்திவேல், பிலிப் ஆகியோர் இக்கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொள்ளமுடியாது என வெளியேறினர். அத்தோடு அமைச்சர் திகாம்பரம் அவர்களுடன் சமூகமளித்திருந்த அங்கத்தவர்களும் வெளியேறினர்.

இந்நிகழ்விற்கு பின்னர் அரங்கத்தில் வெற்று நாட்காலிகளே அதிகமாக காணப்பட்டன.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top