Hirunews Logo
%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
Monday, 19 June 2017 - 16:00
ஆறுமுகம் தொண்டமான் பதவி விலகினார்...
47

Shares
5,652

Views
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பதவியில் இருந்து, முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, இது குறித்த எந்த தகவலும் வெளியாக்கப்படவில்லை.
 
இதேவேளை, ஹட்டன் நகரில் குப்பை அகற்றுவது தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக எதிர்வரும் 23ம் திகதி ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது. 
 
இந்த கூட்டத்தில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த விடயம் குறித்த விவாதம் இடம்பெற்ற போது கருத்து வெளியிட்ட  மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த குப்பை பிரச்சினையை ஒரு அரசியல் பிரச்சினையாக பார்க்காது, பொது மக்களின் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
அதேநேரம், ஹட்டன் நகரில் நாள்தோறும் சேருகின்ற குப்பைகளை தற்காலிகமாக பத்தனை ரிக்காட்டன் பகுதிகளில் கொட்டுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மாகாண அமைச்சர் ரமேஷ் இந்த யோசனையை முன்வைத்தார். 
 
இதன்படி அன்றாடம் குப்பைகளை வேறுபடுத்தி நகரசபை பொறுப்பேற்பது எனவும் அதனை வேறுபடுத்தி பெற்றுக் கொள்வது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
 
இதற்கிடையில், குப்பை பிரச்சினை குறித்த விவாதத்தின் போது, சட்டத்தை மீறி கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
 
இதேவேளை, நுவரெலியா அஞ்சல் அலுவலக கட்டிடத்தை தனியாருக்கு கையளிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த திட்டத்தை எந்த காரணம் கொண்டும் நடைமுறைபடுத்த இடமளிக்க முடியாது என கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர். 
 
இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படுமானால் தான் வீதியில் இறங்கி போராடவும் தயாராக இருப்பதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
248 Views
5,517 Views
4,063 Views
12,440 Views
20,528 Views
59,401 Views
Top