டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார்

Thursday, 22 June 2017 - 13:54

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும், டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குடியரசு கட்சியின் தரப்பில் இது தொடர்பில் எச்சரிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த தினம் தெற்கு கரொலினா மற்றும் ஜோர்ஜியாவில் நடைபெற்ற விசேட காங்கிரஸ் தேர்தல் இரண்டிலும் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்றிருந்தது. 
 
இதன்மூலம் அவரே அடுத்த ஜனாதிபதி தேர்தலிலிலும் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது தெரியவந்திருப்பதாக, குடியரசு கட்சியின் உறுப்பினர்ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும், அமெரிக்காவில் அவருக்கு ஆதரவு பெறுகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.