இன்று மாலை நாடாளுமன்றில் விசேட விவாதம்...

Thursday, 22 June 2017 - 14:21

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
சுகாதார அமைச்சின் வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்று மாலை நாடாளுமன்றில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

மாலை 4.30 மணி அளவில் விவாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சாபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சைட்டம் பிரச்சினையை மையமாக வைத்து நேற்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.