மாலிங்கவிடம் விசாரணை? (காணொளி இணைப்பு)

Friday, 23 June 2017 - 8:34

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%3F+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுகளுடன் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இந்த குழாம் கடந்த 21ம் திகதி காலை கொழும்பு ஆர் .பிரேமதாக மைதானத்தில் தனது பயிற்சிகளை ஆரம்பித்தது.

இதன் போது , அவர்களின் உடற்தகுதி சோதனையிடப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன் போது , 20 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதல் இடங்களை இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான நுவன் குலசேகர மற்றும் லசித் மாலிங்க பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , லசித் மாலிங்க கடந்த தினத்தில் ஊடகங்களில் வௌியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாரிக்க அவர் அதிகாரிகளால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு , இலங்கை கிரிக்கட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க இது தொடர்பில் மாலிங்கவிடம் விடயங்களை விசாரித்துள்ளதாக தெரிகிறது.

எனினும், அவ்வித சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அசங்க குருசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை , நான்கு பேர் அடங்கிய இலங்கை கிரிக்கட் தேர்வுக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி , புதிய தேர்வுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவதானம் செலுத்தியுள்ளார்.

தற்போதைய தேர்வுக்குழுவில் ஒருவர் மாத்திரம் மாற்றப்படலாம் என இலங்கை கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.