பேராசிரியர் சமன் காலமானார்

Friday, 23 June 2017 - 17:01

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
தேசிய கொள்கைகள் கற்றல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் சமன் கெலெகம உயிரிழந்துள்ளார்.
 
தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது.
 
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸை புனித தோமஸ் கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவரான பேராசிரியர் கெலெகம, பொருளாதார நிபுணராகவும், கொள்கை வகுப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
 
அவர் தமது 58 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.