நீங்கள் இதனை சாப்பிடுபவரா? ஆபத்து!

Saturday, 24 June 2017 - 12:08

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%3F++%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
நம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப்பார்கள்.

ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் உயிர்.

ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும்.

இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு.

பிஸ்கெட்கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும்.

இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம். 

அப்படி, தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை E223 என்பது போல நமக்கு புரியாத மொழியில் குறிப்பிட்டிருப்பதால், அது தெரிவதும் இல்லை.

கோதுமையில் இருக்கும் புரதச்சத்தான க்ளூட்டன் (Gluten) சிலரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது.

இதனால் கோதுமையில் தயாராகும் பிஸ்கெட்டுகளால் பெரியவர்களுக்கு வாந்தி, பேதி, நெஞ்சு எரிச்சல் மற்றும் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.