டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

Saturday, 24 June 2017 - 13:14

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
நாட்டின் இந்த வருடத்தின் தற்போது வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு நோயினால் 200 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல்மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் நூற்றுக்கு 20 சதவீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக காலை 6 மணி முதல் 9 மணியிலான காலப்பகுதியிலேயே டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே பாடசாலையில் முற்பகல் 11 மணிமுதல் நண்பல் 12 மணிவரையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சுடன் இணைத்து சுகாதார அமைச்சு மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டெங்கு நோயை இல்லாதொழித்து ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பிற்கான பொது செயற்திட்டம் இன்று சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தை அண்டிய பகுதிகளில் ஆரம்பமானது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனையின்படி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.