அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இந்தியா!

Monday, 26 June 2017 - 9:49

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
 
போர்ட் ஒப் ஸ்பேயினில் ( Port of Spain) இடம்பெற்ற இந்த போட்டி மழை காரணமாக 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெற்றது.
 
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களை பெற்றது.
 
துடுப்பாட்டத்தில் ரஹானே (Rahane) 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 
பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
 
இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை , மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததன்மூலம், ஒருநாள் போட்டியில் அதிக முறை 300 ஓட்டங்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.

இந்தியா 96-வது முறையாக 300 ஓட்டங்களை தொட்டுள்ளது. இதற்கு முன்பு அவுஸ்திரேலியா 95 முறை 300 ஓட்டங்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. அதை இந்தியா முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.