திருமணத்திற்கு மறுத்த காதலனின் அந்தரங்கத்தை வெட்டிய காதலி!

Monday, 26 June 2017 - 15:13

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%21
டெல்லியில் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த 35 வயது ஆணின் அந்தரங்க உறுப்பை 22 வயது இளம்பெண் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த புதன்கிழமை (22) இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய காதலனுக்கு, காதலியின் அண்ணி தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உடனடியாக காதலியை சந்திக்க வரும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அவசர அவசரமாக காதலியின் வீட்டிற்கு சென்ற காதலனிடம் திருமணத்தைக் குறித்து பேசியுள்ளார் காதலி. 

ஆனால் குறித்த நபரின் பெற்றோர் அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் அந்த பெண்ணை திருமணம் செய்ய அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. 

பின்னர் சிறிது நேரம் கழித்து காதலனை குளியலறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற அந்த பெண் அவருடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காதலி சமயலறைக்கு சென்று கத்தி ஒன்றை எடுத்துவந்து குறித்த நபரின் அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும்போது குறித்த பெண்ணின் அண்ணனும் அண்ணியும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் உதவிக்கேட்டு அலறிபடியே வெளியே வந்த கோபி அக்கம் பக்கத்தினரை நாடியுள்ளார்.

நடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் காதலன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். 

பாதிக்கப்பட்ட காதலரை பொலிசார் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் காதலியான குறித்த பெண் மீது இந்திய குற்றவியல் சட்டம் 326ன் கீழ் வழக்குபதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.