பிரித்தானியாவில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு

Monday, 26 June 2017 - 19:39

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கான உடன்படிக்கையை ஜனநாயக தொழிற்சங்க கட்சியுடன், கன்டர்வேட்டிவ் கட்சி ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
 
கடந்த 8ம் திகதி அங்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மைப் பெற்றிருக்கவில்லை.
 
அதிகபடியான ஆசனங்களைப் பெற்ற கன்டர்வேட்டிவ் கட்சி, ஜனநாயக தொழிற்சங்க கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தது.
 
எனினும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
 
தற்போது ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளன.