சவுதியின் விதிமுறைகளை ஏற்க முடியாது - கட்டார் அதிரடி

Wednesday, 28 June 2017 - 17:55

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
சவுதி அரேபியா விதித்துள்ள விதிமுறைகளை ஏற்பதற்கு தாம் தயாராக இல்லை என கட்டார் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , ஏற்பட்டுள்ள பிரச்சினையான நிலைமையை தீர்ப்பதற்கு செயற்படவேண்டிய முறை தொடர்பில் கடந்த தினம் அமெரிக்கா விடுத்திருந்த அறிவிப்பை ஏற்க தாம் தயார் என கடாரின் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை , கட்டாருக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மானத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள்பரிசீலனை செய்ய விரும்பாத காரணத்தால் , சவுதி உள்ளிட்ட நாடுகள் குறித்த விதிமுறைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.