Hirunews Logo
%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81...
Monday, 17 July 2017 - 15:29
ரொஷேன் சானக உயிரிழந்தது தொடர்பிலான விசாரணை அறிக்கை வௌிப்படுத்தப்பட்டது...
224

Shares
26,980

Views

கட்டுநாயக்காவில் கடந்த 2011ம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து உயிரிழந்த ரொஷேன் சானக ரத்னசேகரவின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மானாம திலகரட்ன ஆணைக்குழுவின் அறிக்கை வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை 06 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ரொஷேன் சானகவின் தாயாருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த அறிக்கை கடந்த 13ம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஊழியர் சேமலாப நிதியை கொள்ளையிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களால் 2011 ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ரொஷேன் சானக உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,215 Views
12,848 Views
5,029 Views
6,248 Views
7 Views
9,319 Views
Top