Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+21+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
Monday, 17 July 2017 - 18:49
குழந்தை பிரசவித்த தாயொருவருக்கு 21 நாட்கள் கழித்து ஏற்பட்ட பரிதாபம்! (படங்கள் இணைப்பு)
377

Shares
45,316

Views
தனது மூன்றாவது குழந்தையை பிரசவிப்பதற்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாயொருவர் உயிரிழந்த சம்பவமொன்று கலேவெல பஹலவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக அவர் தொடர்ந்து 21 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பி.கே.தீபிகா பிரியங்கிகா என்ற 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியின் மூன்றாவது பிரசவத்திற்காக தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் , குறிப்பிட்ட பிரசவ தினத்தில் குழந்தை பிறக்காததால் அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டதாக அவரின் கணவரான ஏ,எம்.நந்தசிறி தெரிவித்திருந்தார்.

பின்னர் தனது மனைவிக்கு ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இரண்டு தினங்கள் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவனைக்கு மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அங்கு அவருக்கு 19 நாட்கள் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தனது மனைவி உயிரிழந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தனது மனைவி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தான் ஆதரவற்று உள்ளதாகவும் , இவ்வாறு தாய்மார்கள் உயிரிழப்பதற்கான காரணத்தை ஆராந்து கண்டறிய வேண்டும் எனவும் கண்ணீர் மல்க பிரியங்கிகாவின் கணவர் தெரிவித்திருந்தார்.

    
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
818 Views
3,952 Views
5,712 Views
11,805 Views
87 Views
5,526 Views
Top