சம்பூரில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி...

Thursday, 20 July 2017 - 8:19

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...
சம்பூரில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கொரியாவின் முன்மொழிவு குறித்து ஆராய்வதற்காக, இந்திய உயர்ஸ்தானிகரம் இணக்கம் தெரிவித்துள்ளது. 
 
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அங்கு முன்னர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த போதும், சுற்றாடல் நலன் கருதி அந்த திட்டம் கைவிடப்பட்டது.
 
பின்னர் அங்கு இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்ட போதும், அதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லாத நிலையில், ஜப்பானுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
அதேநேரம் தென்கொரியாவும் இதற்கான முன்மொழிவை வைத்துள்ள நிலையில்,இது குறித்தும் பரிசீலிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.