15 நாட்கள் ரங்கன ஹேரத்துடன் விளையாடவுள்ள முன்னணி பந்துவீச்சாளர்கள்!

Thursday, 20 July 2017 - 18:05

15+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸட் போட்டியில் சர்வதேச கிரிக்கட் சம்மேளன தரப்படுத்தலில் முதல் மூன்று இடங்களில் உள்ள பந்துவீச்சாளர்கள் விளையாடவுள்ளமை சிறப்பம்சமாகும்.

சுற்றுலா சிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சு திறமையின் படி அவர் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சு தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டார்.

அந்த போட்டியில் ரங்கன ஹேரத் 11 விக்கட்டுக்களை வீழ்த்தி தொடராட்ட நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.

இந்த தரப்படுத்தலில் முதலிடத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் மூன்றாவது இடத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்தியா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டி ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும்  , மூன்றாவது போட்டி ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணி இறுதியாக 2015ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

அப்போது, இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கட் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 க்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது.