கடனட்டைகளின் ஊடாக 100 கோடி ரூபாய் மோசடி

Friday, 21 July 2017 - 8:27

+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+100+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF
இந்தியாவின் பெங்களுரில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இலங்கையர், நீண்டகாலமாக பாரிய கடனட்டை மோசடி தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் என்று தெரியவந்துள்ளது. 
 
2012ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழக ஆளுனரால் அவரை கைது செய்வது தொடர்பின் அவசர உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர் கடனட்டைகளின் ஊடாக 100 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த வாரம் அவர் பெங்களுர் ஜலஹாலி பகுதியில் போலிக்கடனட்டையைப் பயன்படுத்தி தொலைகாட்சி ஒன்றை கொள்வனவு செய்தப் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார். 
 
த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.