இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு வலுவான நிலையில்?

Friday, 21 July 2017 - 8:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3F
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த தீவிரவாத முறியடிப்பு தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு இலங்கை – அமெரிக்க கூட்டு தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள் என்பன மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
 
எனினும் தொடர்ச்சியாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பு வலுப்பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம் குறித்த அறிக்கையின் படி இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 
 
மேலும் இலங்கையில் தீவிரவாதத்துக்கான நிதியளிப்பு மற்றும் பணச்சலவை என்பன தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.