பிக்பாஸில் இருந்து ஓவியாவை ஓரம்கட்ட காரணம் இதுவா? வெளியான அதிர்ச்சி தகவல்

Friday, 21 July 2017 - 15:25

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%93%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%3F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று 'தமிழ் தலைவாஸ்' கபடி அணியினர் வருகை தந்து கபடி விளையாடினர் என்பது தெரிந்ததே. அந்த நேரத்தில் கபடி அணியினர் பிக்பாஸ் பங்கேற்பாளர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.
 
அப்போது கபடி அணி வீரர்களில் ஒருவர் ஓவியாவிடம், 'வெளியே உங்களுக்குத்தான் மக்கள் சப்போர்ட் இருக்கின்றது, அதனால் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் வின்னர்' என்ற உண்மையை உடைத்துள்ளார். இதை கேட்டதும் ஓவியா துள்ளி குதித்துள்ளார்.
 
இந்த விஷயம் மற்ற பங்கேற்பாளர்களுக்கு கசிந்ததால் ஓவியாவை எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று டார்ச்சர் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ஓவியா வெளியேற்றப்பட்டால் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும் வாய்ப்பும் உள்ளதால் அவரை அவ்வளவு விரைவில் அந்த தொலைக்காட்சி வெளியேற்ற்றும் முடிவை எடுக்காது என்றே ஊகிக்கப்படுகிறது.
 
ஓவியாவை வெளியேற்றினால் இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றும், #No oviya no bigboss என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் நிலையில் பிக்பாஸ் என்ன முடிவெடுக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.