நவாஸ் ஷெரிப் பனாமா ஊழல் வழக்கில் குற்றவாளி..?

Saturday, 22 July 2017 - 19:43

%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF..%3F
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பனாமா ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அவர் பதவி விலகி அவரது சகோதரர் பிரதமராக தெரிவு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரிப் மீது பனாமா ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போது, தீர்ப்பு திகதி அறிவித்தல் இன்றி நீதிபதிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நவாஸ் ஷெரிப் தலைமையிலான கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவரது சகோதரர் ஷபாஸ் ஷெரிப், பிரதமராக பதவி ஏற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.