உயிரிழந்த காவற்துறை உத்தியோகஸ்தர்: வருத்தம் தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன்!!

Sunday, 23 July 2017 - 13:37

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%3A+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%21%21
யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவற்துறை உத்தியோகஸ்தரின் பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது நீதிபதி இளஞ்செழியன், தனது உயிரை காப்பாற்றுவதற்காக உயிர் தீயாகம் செய்த காவற்துறை உத்தியோகஸ்தரின் பிரேத பரிசோதனை இடம்பெற்ற இடத்திற்கு வந்துள்ளார்.

அதன்போது உயிரிழந்த காவற்துறை உத்தியோகஸ்தரின் மனைவி அந்த இடத்தில் இருந்துள்ள நிலையில், அவரின் கணவரின் மரணம் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் மிகவும் சோகத்துடன் தனது வருத்தத்தை  தெரிவித்துள்ள நிலையில் மன்னிப்பும் கோரியுள்ளார்.

அதற்கு முன்னர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய காவற்துறை உத்தியோகஸ்தரின் சுக துக்கத்தை விசாரிப்பதற்காக நீதிபதி இளஞ்செழியன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

நேற்றைய தினம் நல்லூர் ஆலயவலாகத்தின் பின்புற வீதியில் வைத்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மீது துப்பிக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலின் போது நீதிபதியின் இரண்டு காவல்துறை மெயப்பாதுகாவலர்கள் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.