ஆப்கானிஸ்தானில் 70 கிராமவாசிகள் கடத்தல்

Sunday, 23 July 2017 - 14:02

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+70+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஆப்கானிஸ்தானின் வடக்கு பிராந்தியமான கந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் கடத்தப்பட்டு 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மக்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் வைத்து அவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்டவர்களில் ஏழு பேர் கொலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, 30 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட ஏனையவர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் எந்த தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

தலீபான் போராளிகள் இந்த கடத்தலை நடத்தியிருக்கக் கூடும் என ஆபகானிஸ்தான் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை சீனாவின் ஹெபெய் பிராந்தியத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 11 பேர் மரணித்தனர்.

சீன அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்று மோதிக்கொண்டதினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.