முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று..

Wednesday, 26 July 2017 - 8:22

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
 
இலங்கை டெஸ்ட் அணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ்சந்திமால் சுகவீனமுற்றுள்ள நிலையில், இன்றைய போட்டிக்கான இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத் தலைமை தாங்குகிறார். 
 
இன்றை போட்டிக்கான இலங்கை அணியில் நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக தனுஸ்க குணதிலக அல்லது தனஞ்சய டி சில்வா ஆகியோருள் ஒருவர் களமிறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் இன்று 5 பந்துவீச்சாளர்களுடன் இலங்கை களமிறங்கும் பட்சத்தில், இடதுகைது சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார அணியில் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன் நுவான் பிரதீப்பும் இன்றைய அணியில் பங்குபற்ற வாய்ப்புகள் உள்ளன.
 
இந்திய அணியைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க பரீட்சாத்த நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். 
 
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அபினவ் முகுந்தும், சிக்கார் தவானும் களமிறங்குவார்கள் .
 
அத்துடன் ஹார்டிக் பாண்டியாவும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அத்துடன் இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படும் நிலையில், இந்தியா ஐந்து சிறப்பு துடுப்பாட்ட வீரர்களுடன் மாத்திரம் களமிறங்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இதேவேளை, இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாடுவாராக இருந்தால் அது அவருடைய 50வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியாக அமையும். 
 
அத்துடன் இதுவரையில் ஐந்து போட்டிகளுக்கு இலங்கை அணிக்காக தலைமை தாங்கியுள்ள ரங்கன ஹேரத், அவற்றில் 3 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், ஒன்றில் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது.
 
இந்த போட்டிகள் அனைத்தும் சிம்பாப்வே மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு எதிரானவை. 
 
மேலும் இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற எந்த டெஸ்ட் போட்டிகளும் முடிவுகள் இன்றி முடிந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.