பிரபல இயக்குநர் கைது செய்யப்பட்டார்!

Wednesday, 26 July 2017 - 10:04

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
ஆவணப்பட பெண் இயக்குநர் திவ்யபாரதி, 8 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபார தியை காவற்துறை இன்று கைது செய்தனர்.

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, சமூக சேவகர். மேலும் இவர் லெனினிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்.

2009-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் தங்கி படித்த சட்டக்கல்லூரி மாணவர் சுரேஷ் பாம்பு கடித்து உயிர் இழந்தார்.

அவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.

ஆதிதிராவிடர் விடுதியில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும், இறந்த மாணவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி திவ்யபாரதி, உயிர் இழந்த சக மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன், எழுச்சி மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிஜாமும் பங்கேற்றார்.

இது தொடர்பாக மதிச்சியம் காவற்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.

இதில் திவ்யபாரதியும், நிஜாமும் ஆஜர் ஆகாமல் இருந்து வந்தனர்.