கல்குடாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

Monday, 14 August 2017 - 8:59

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

86.74 மில்லியன் ரூபா  பெறுமதியான அபிவிருத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாழைச்சேனை தொடக்கம் ஓட்டமாவடி வரையான  54 கிலோ மீற்றர் தூரத்திலான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்  அமைச்சர்  ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த  பெப்ரவரி மாதம் ஏறாவூருக்கான ஜனாதிபதியின் விஜயத்தின் போது கிரான் தொடக்கம் ஓட்டமாவடி, வாழைச்சேனை வரையான குடிநீர்த்திட்டமொன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.