அருவாள், பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட அஜீத் தொடர்பில் திடுக்கிடும் தகவல்

Thursday, 17 August 2017 - 14:30

+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
பண்டாரகம, உயன்வத்த காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட, கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக நம்பப்படும் நபரின் தலைப்பகுதியின் பாகங்களை மேலதிக பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வைத்துக்கொண்ட நாகொட விசேட சட்ட வைத்திய அதிகாரி, இந்த மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளதாக பண்டாரகம

காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன், மரணத்துக்கான காரணம் தொடர்பில், 24ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.

அஜீத் குமார கந்தனாராச்சி என்ற பெயருடைய 36 வயதுடைய கொலைசெய்யப்பட்டுள்ள குறித்த நபர், எஹலியகொட அரச வங்கியில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படுகின்றது.

கடந்த 11ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் இரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார். ஹொரணவில் உள்ள தனது வீட்டிலிருந்து பொக்குனுவிட்ட சந்திக்கு வந்த முச்சக்கரவண்டியின் சாரதியிடம் முச்சக்கரவண்டியை பெற்றுக்கொண்டு தனியாக சென்றுள்ளார்.

விரைவில் வருவதாக கூறியே முச்சக்கரவண்டியை பெற்றுசென்றுள்ளார்.

சில மணித்தியாலங்கள் கடந்தும் அவர் திரும்பி வராத நிலையில், அஜீத் குமாரவின் அண்ணாவுக்கு அலைபேசி அழைப்பு மேற்கொண்டு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து, அஜீத் குமாரவிவுக்கு அழைப்பு மேற்கொண்ட அண்ணணிடம், இருள் காரணமாக தேடிவந்த பொருள் கிடைக்கவில்லை, இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

பின்னர், மீண்டும் அழைப்பை ஏற்படுத்தியபோது, அதற்கு பதிலளித்த மற்றுமொரு நபர், 'நீங்கள் இங்கு வந்து அசௌகரியத்துக்கு முகங்கொடுக்க வேண்டாம்' என தெரிவித்ததாக, காவல்துறையில் அண்ணன் கூறியுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட நபர், 10 கிராம் போதைப்பொருளை எடுத்து செல்வதாக கூறியதாக அண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தபோது, அஜீத் குமார தனது அலைபேசியில் பலருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அவர், இந்திக என்ற பெயரை உச்சரித்ததாக முச்சக்கரவண்டி சாரதி கூறியுள்ளார்.

இந்திக என்ற அஜீத் குமாரவின் நண்பனை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும், தனது மனைவியுடன் அஜீத் குமார கள்ள தொடர்பு வைத்திருந்ததாக, இந்திக சந்தேகம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல்போன அஜீத் குமாரவின் சடலம், 4 நாட்களுக்கு பின்னர், உயன்வத்த காட்டுப்பகுதியில் பழுதடைந்த நிலையில் 15ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.

சடலத்தின் உடலில் அருவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இரண்டு மற்றும் பொல்லால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதுடன், முகத்திலும் அருவாளால் வெட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.