டெங்கு நோயினால் 350 பேர் பலி

Friday, 18 August 2017 - 7:34

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+350+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொற்றுநோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
 
மேலும் கடந்த 7 மாதங்களில் ஒருலட்சத்து 37 ஆயிரத்து 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் வடக்கு கிழக்கில் டெங்குஒழிப்புக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதேநேரம், அடுத்த மாதம் 20ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் நாடு தழுவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
டெங்கு பாதிப்பு கொழும்பு மாவட்டத்திலேயே அதிகம் நிலகின்றமை குறிப்பிடத்தக்கது.