எதிர்வரும் பாதீட்டில் மேலுமொரு நிவாரண தொகுப்பு

Friday, 18 August 2017 - 8:10

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எதிர்வரும் வருடத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமசரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி , இணைய சேவை மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத தொலைத்தொடர்பு வரி செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது.

மேலும், சிறிய ரக கெப் மற்றும் சிறிய பாரவூர்திகளுக்கான உற்பத்தி வரியை 3 இலட்சம் ரூபாவால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல், 150சீசீ ரகத்துக்கு குறைவான வலுக்கொண்ட உந்துருளிகளின் உற்பத்தி வரி, 90 வீதத்தினால் குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , இந்த வரி குறைப்பு தேர்தலை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படவில்லை என அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்திருந்தார்.