தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் மீண்டும் நிதியமைச்சுக்கு

Friday, 18 August 2017 - 11:04

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
லொத்தர் சபைகள் இரண்டு மீண்டும் நிதியமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பனவே நிதியமைச்சின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று வெளியாகியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சராக பதவிவகித்த ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றப்பின்னர் இந்த லொத்தர் சபைகள் இரண்டும் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, வெளிவிவகார அமைச்சு பதவியை ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவற்றை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.