இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கின்றமை தொடர்பில் வருத்தம்

Friday, 18 August 2017 - 14:31

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கின்றமை தொடர்பில், இந்தியாவின் காங்கிரஸ் கட்சி வருத்தம் வெளியிட்டுள்ளது.
 
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் சுதந்திரதின உரையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, தமது அண்டைய நாடுகளில் செல்வாக்கினை இழந்து வருகிறது.
 
ரஷ்யா பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குகிறது.
 
நேபாளம் இந்தியாவிடம் இருந்து விலகிச் செயற்படுகிறது.
 
இலங்கையில் சீனா துறைமுக நகரத்தை நிர்மாணித்து வருகிறது.
 
இவ்வாறான நிலையில், பிரதமர் மோடி எதற்காக மக்களால் பிரதமராக தெரிவு செய்யப்பட்டாரோ, அந்த கடமையை அவர் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாக பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.