ஆட்டோவில் வந்த அடுத்த சூறாவளி! பிக்பாஸ் வீட்டுக்கு இன்றைய புதுவரவு

Friday, 18 August 2017 - 16:43

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை வெளியேற்றியவுடன் அவரது வெற்றிடத்தை நிரப்ப நிர்வாகமும் அவ்வப்போது ஆட்களை உள்ளே அனுப்பிக்கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்தான் கொஞ்சம் கூட மெருகேறவே இல்லை.

பிந்துமாதவி, சுஜா வருணே, ஹரிஷ் என ஏற்கனவே மூன்று புதிய முகங்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே புதிய பங்கேற்பாளர்களாக நுழைந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு நடிகை நுழைந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய காஜல் பசுபதி என்பவர் தான் புதிய பங்கேற்பாளர்.

சரண் இயக்கி வரும் 'ஆயிரத்தில் இருவர்' உள்பட ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் இன்று பிக்பாஸ் வீட்டில் ஆட்டோவில் வந்து இறங்குவது போன்ற ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

புதிய பங்கேற்பாளராக வந்த காஜலை வழக்கம்போல் சினேகன் தனது பாணியில் வரவேற்றார்.

ஆனால், புதிய வரவால் காயத்ரியின் முகம் அஷ்டகோணலாக மாறியது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

காஜல் பசுபதி இதன்போது, ஆரோவை பார்த்து, ஹாட்டா அழகா உலக விரும்புர பொண்ண (ஓவியா) உங்களுக்கு ஏன் வேணானு தோனுச்சி என அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது ஆரோ பதில கூறடுடியாமல் திகைத்து இருந்தமை ப்ரமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.