சம்பூர் மக்கள் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம்

Friday, 18 August 2017 - 18:30

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீளக் குடியேறிய மக்கள், தமது விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிக்குமாறும் விடுவித்ததிற்கான முறையான ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இன்று காலை 11.00 மணியளவில் கடிதங்களையும் அதற்கான பூரண ஆவணங்களையும் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

இக் கடிதங்களை மக்கள் சார்பாக சம்பூர்,மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமத்தில் உள்ள 3 கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் சேகரித்து முறைப்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் கையளித்தனர்.