'சன் சீ' கப்பல்; மனித கடத்தலில் ஈடுபட்டவருக்கு 18 வருட சிறை தண்டனை?

Friday, 18 August 2017 - 20:01

%27%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%27+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%3B+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+18+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%3F
சன் சீ என்ற சரக்கு கப்பலில் மனித கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கு 18 வருட சிறையடைப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கனேடிய சட்டத்துறை கோரியுள்ளது.
 
தாய்லாந்தில் இருந்து 492 இலங்கை தமிழர்களுடன் சட்டவிரோத பயணத்தில் ஈடுபட்டிருந்த 'சன் சீ' என்ற சரக்கு கப்பல் 2010 ஆண்டு கனேடிய, பிரிட்டிஷ் கொலம்பியாவில் நங்கூரமிட்டது.
 
இந்த நிலையில், இந்த மனித கடத்தலுடன் தொடர்பு கொண்டவர் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பயணியாக அந்த கப்பலில் பயணித்த குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கு முன்னதாக தண்டனை வழங்கப்பட்டது.
 
எனினும், அதனை ஆட்சேபித்து, அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளின் முடிவிலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஏற்கனவே 6 வருடங்கள் சிறையடைக்கப்பட்டிருந்த அவர், தீர்ப்பு வழங்கப்பட்டால் மேலும் 11 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.