குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Saturday, 19 August 2017 - 7:38

%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள், அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரேலிய மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பிரதேசங்களின் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.