பிரிந்து செயல்படும் இரண்டு அணிகளும் விரைவில் ஒன்றிணைந்து செயற்படும்

Saturday, 19 August 2017 - 19:35

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்து செயல்படும் இரண்டு அணிகளும் விரைவில் ஒன்றிணைந்து செயற்படும் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் தெரவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டு அணிகள் இணைப்பதை பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் இது தொடரபில் சாதகமான முடிவொன்று எட்டப்படும் என பன்னீர் செல்வம் இன்று அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இரு தரப்பினருக்கும் இடையில் சாதகமான ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒ பன்னீர் செல்வம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரு அணிகளுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோர் காட்டிய அரசியல் பாதையில் பணிகளை தொடரவும் இரு அணிகளின் இணைப்பு திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.