முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று

Sunday, 20 August 2017 - 7:26

+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தம்புள்ளை சர்வதேச விளையாட்டு திடலில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி ஒருநாள் போட்டிக்கான புதிய தலைவர் உபுல் தரங்கவின் தலைமையில் களமிறங்கவுள்ளது.

இந்த ஒரு நாள் தொடரில் இரண்டு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கை அணிக்கு இன்றைய போட்டி சவால்நிறைந்ததாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

2019 உலக கிண்ண போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற, இந்த தொடரில் 2 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயம் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
இதேவேளை,  இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளமை இந்திய அணிக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.