ஒருநாள் கிரிக்கட் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்!

Sunday, 20 August 2017 - 13:48

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
இந்திய கிரிக்கெட்டின் புதிய மந்திரம் கோஹ்லி. டெஸ்ட் தொடர்களில் தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கோஹ்லி சர்வதேசப் போட்டிகளில் ஓருநாள் துடுப்பாட்ட விரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவிலான ஒருநாள் போ்ட்டிகளுக்கான துடுப்பாட்ட விரர்களுக்கான தரவரிசையில் 873 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதையடுத்து, அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், 861 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச அளவில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் ஓர் இலங்கை மற்றும் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், அணிகளுக்கான தரவரிசையில் 119 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.