இந்தியாவில் கடந்த 5 வருட காலப் பகுதியினுள் 586 தொடரூந்து விபத்துக்கள்

Sunday, 20 August 2017 - 19:51

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+5+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+586+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்தியாவில் கடந்த 5 வருட காலப் பகுதியினுள் 586 தொடரூந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தொடரூந்து துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து அனர்த்தங்கள் குறித்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றுள் 56 விபத்துக்கள் தொடரூந்துகள் தடம் புரண்டமையினால் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு குறித்த கருவிகள் பொருத்தப்பட்ட போதிலும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைய வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற 'உட்கல்' கடுகதி தொடரூந்து விபத்தில் 21 பேர் பலியானதுடன் 150 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுதவிர 14 பெட்டிகள் தடம்புரண்டன.

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கான்பூருக்கருகில் இன்டோ – பட்னா கடுகதி விபத்துக்குள்ளானதில் ஆகக்கூடிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்தில் 150 பலியானதுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதேபோல் 2015 மார்ச்சி 20 ஆம் திகதி தெஹ்ரடுன் வார்நாசி ஜனதா கடுகதி தொடரூந்து விபத்துக்குள்ளானதில் 58 பயணிகள் பலியானதுடன், 150 பேர் வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.