update - கதிர்காமம் ஆலயம் மீண்டும் திறப்பு

Tuesday, 22 August 2017 - 7:03

update+-+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட குழப்பநிலை தற்போது சமரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தின் பூஜகர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளர்.



update :- Tuesday, August 22, 2017 8.20 Am
----------------------------------------------------------

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை இன்று காலை நடைபெறவில்லை.
 
குறித்த ஆலயத்தின் கதவுக்கான திறப்பு, பஸ்நாயக்க நிலமேயிடம் இருந்த நிலையில், அதனை அவர் உரிய நேரத்தில் ஆலயத்துக்கு கொண்டுவரவில்லை என்று பூஜகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எனினும் தாம் திறப்பை கொண்டுச் சென்ற போதும், பூஜகர்கள் கதவைத் திறக்கவிடாமல் தடுத்ததாக, பஸ்நாயக்க நிலமே குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் இரண்டு தரப்பிலும் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கதிர்காமம் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை நடைபெறாத சம்பவங்கள் வரலாற்றில் மிகவும் அரிதாகவே பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்று அதிகலைப் பூஜைக்காக கூடி இருந்த பக்தர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், இந்த சம்பவம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.