இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நட்சத்திர ஆமைகள் மீட்பு

Wednesday, 23 August 2017 - 15:41

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த இந்திய நட்சத்திர ஆமைகள் சென்னை - ஆவடி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
 
சுமார் 2 ஆயிரத்து 500 ஆமைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக த ஹிந்து, செய்தி வெளியிட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் ஆமைகளை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தியுள்ளனர்.
 
அவ்வாறு சுமார் 10 ஆயிரம் ஆமைகளை இவர்கள் ராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு கடத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய நட்சத்திர ஆமை 1972ஆம் ஆண்டு வனசீவராசிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, அழிந்துபோகும் இனமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து ஒரு தொகை கஞ்சா, தூத்துகுடியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளில் பெறுமதி சுமார் 20 லட்சம் இந்திய ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.