Hirunews Logo
+12+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
Thursday, 14 September 2017 - 10:21
12 குரங்குகள் மாரடைப்பால் மரணம்!
56

Shares
6,754

Views
இந்தியா - உத்தரப்பிரதேச காட்டுப்பகுதியில் திடீரென புலி பயமுறுத்தியதால் 12 குரங்குகள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச காட்டுப்பகுதியில் 12 குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்தன. இறந்த குரங்குகளை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், அனைத்து குரங்குகளுக்கும் தொடர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளன என்று கூறினர்.

புலிகள் அவ்வப்போது உலவும் அப்பகுதியில், புலியின் உருமல் சத்தத்தைக் கேட்டு குரங்குகள் இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அனைத்து குரங்குகளுக்கும் ஒரே நேரத்தில் தொடர் மாரடைப்பு ஏற்பட புலியே காரணமாக கூறப்பட்டாலும், இப்படி நடக்க சாத்தியம் உண்டா என்ற கேள்வியும் வனத்துறையினரிடையே எழுந்துள்ளது.

பிரபல கால்நடை மருத்துவரான பிரிஜேந்திர சிங் கூறும் போது, வனவிலங்குகளுக்கு இதுபோல நடக்க வாய்ப்பில்லை.

புலி வருவதும், போவதும் காட்டுப் பகுதியில் இயல்பு.

புலியைக் கண்டு பயந்து குரங்குகள் மரணமடைந்தது என்பது உண்மையான கூற்றாக இருக்க வாய்ப்பில்லை.

அந்தக் குரங்குகள் எதாவது தொற்று நோயால் இறந்திருக்கலாம் என்று கூறினார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,415 Views
15,403 Views
635 Views
2,986 Views
367 Views
16,868 Views
Top