Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
Thursday, 14 September 2017 - 12:47
இலங்கை வீரர்கள் கலந்து கொண்ட வெளிநாட்டு கிரிக்கட் தொடரை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்
326

Shares
39,127

Views
ஆப்கானிஸ்தான் - காபுல் நகரில் மைதானம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் காபுல் நகரில் ஆரம்பமான இருபதுக்கு 20 கிரிகட் தொடரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுதாரி மைதானத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்த போதே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த தாக்குதலால் எந்தவொரு வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் அசான் பிரியன்ஞன் Band-E-Amir Dragons  அணி சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த தாக்குதல் இடம்பெறும் போது Boost Defenders vs Mis-E-Ainak Knights  அணிகளுக்கு இடையிலான போட்டியில், போட்டி நடுவராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் பந்து வீச்சளர்களில் ஒருவரான கிரகம் லெப்ரோய் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து இந்த போட்டிக்கு சென்ற எந்தவொரு வீரருக்கும் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் பொறுப்பேற்காது என குறித்த வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி எஸ்லிடி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரர்களான மஹ்ரூப் மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
483 Views
3,538 Views
5,674 Views
11,475 Views
116 Views
5,074 Views
Top