Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Thursday, 14 September 2017 - 13:33
கடற்றொழில் படகுகளை தமிழகத்துக்கு கொண்டுச் செல்ல அனுமதி வழங்கவில்லை
33

Shares
3,959

Views
விடுவிக்கப்பட்ட கடற்றொழில் படகுகளை இலங்கையில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு கொண்டுச் செல்ல, இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
 த ஹிந்து செய்தித்தாள் இதனைத் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக சிறைபடுத்தப்பட்ட 42 படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தது.
 
அவற்றில் 36 படகுகள் மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதாக அவற்றை ஆய்வு செய்த தமிழக கடற்றொழில் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
 
எனினும் அவற்றை மீள தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு வழங்கும் வரையில் தமிழக அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
விடுவிக்கப்பட்ட படகுகளில் 11 படகுகள் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமானவை.

24 படகுகள் நாகப்பட்டிணம் கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,325 Views
12,963 Views
5,037 Views
6,360 Views
58 Views
9,473 Views
Top