உள்நாட்டு உற்பத்தி வருமானம் 4.0 சதவீதமாக அதிகரிப்பு

Saturday, 16 September 2017 - 14:11

+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+4.0+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டு பகுதியில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி வருமானம் 4.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
இதன்படி இரண்டாம் காலாண்டில் நிலையான விலையில் 22 லட்சத்து 11 ஆயிரத்து 612 மில்லியனாக அதிகரித்துள்ளது.
 
கடந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் இது, 21 லட்சத்து 25 ஆயிரத்து 848 மில்லியனாக பதிவாகியுள்ளது.
 
விவசாயம் கைத்தொழில் சேவைகள், மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது.
 
எனினும் விவசாயத்துறை 2.9 சதவீதமான வீழ்ச்சியை அடைந்துள்ளதாக அரச தொகைமதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.