அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது - சபாநாயகர்

Tuesday, 19 September 2017 - 13:16

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போது சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துக்கள் இவ்வாறு அரசியலமைப்புடன் முரண் பட்டு காணப்படுவதால் , நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.