உலகத்தையே தோற்கடிக்க முடியும்: இலங்கை அணியின் மெஜிக்!

Wednesday, 20 September 2017 - 12:35

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%21
எதிர்வரும் உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி தனது சிறந்த திறமைகளை வெளிகாட்டி முன்வரும் என இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி உலக கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் ஐ.சி.சி உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்தது.

இதனால் உலக கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை மேற்கிந்திய அணி இழந்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை அணி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இதன்படி, இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் 2019 ஆம் உலக கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஐ.சி.சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகளில் பலமுறை இலங்கை அணிக்கு மெஜிக் காட்ட முடிந்ததாகவும், தமது அணி மீண்டும் அதனை நிரூபிக்க ஆயத்தமாகியுள்ளதாகவும் உபுல் தரங்க இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை அணியில் சிக்கல் நிலையில் காணப்பட்டாலும், அதில் இரகசியம் எதுவும் இல்லை என உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.